தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்

சிவகங்கையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தாய் இல்லத்தில் தவழும் மாற்றுத்திறன் கொண்ட நபர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.


" alt="" aria-hidden="true" />


மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகள் சுகாதாரத்துடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா


வைரஸ் பாதிப்பு பல்வேறு இடங்களில் இருந்து வருவதால் மாற்றுத்திறனாளிகள்
ஒவ்வொருவரும் தங்களை முழுைமையாக பாதுகாத்துக் கொள்ளும் வகையில்  ஒவ்வொருவருக்கும் முகக்கவசம், கையுறைகள், கிருமிநாசினி மருந்துகள், முழங்கால் பாதுகாப்பு கவச உறை, டிஸ்யு பேப்பர் மற்றும் காட்டன் ரோல்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் ஒவ்வொரு தவழும் மாற்றுத்திறனாளிக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்க உத்தரவிட்டு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. தவழும் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களை நல்லமுறையில் பயன்படுத்தி நோய் தொற்று வராதவண்ணம் ஒவ்வொருவரும் பாதுகாத்து ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டுமென மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாபியத்துறை அமைச்சர் ஜி.பாப்கரன் தெரிவித்தார்.


பின்னர் தாய் இல்லத்தில் தங்கியுள்ள 17 தவழும் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் அமைச்சர்  வழங்கினார். தொழில்கள் வாரியத்துறை இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தலைவர் பகீரதநாச்சியப்பன், தாய் அறக்கட்டளை தலைவர் புஷ்பராஜ் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.