திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே திருப்புட்குழியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விஜயராகவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.



 


" alt="" aria-hidden="true" />

தேரில் விஜயராகவ பெருமாள் உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில், எழுந்தருளினார். அப்போது அர்ச்சகர்கள் கற்பூர தீபாராதனை காட்ட, கூடியிருந்த பக்தர்கள் பக்திகோஷங்களை எழுப்பினர்.

தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.